/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பு.புளியம்பட்டி மூன்று சாலை சந்திப்பில்நீண்ட கால பிரச்னைக்கு கிடைத்த தீர்வு

ADDED : ஏப் 26, 2025 01:16 AM
புன்செய்புளியம்பட்டி:புன்செய் புளியம்பட்டி நகராட்சி, திரு.வி.க., கார்னர் மூன்று சாலை சந்திப்பில் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் கல்வெர்ட் பாலம் உள்ளது. நகராட்சி குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களின் கழிவுநீர், இதன் வழியாக சென்று அம்மன் நகர் மழை நீர் ஓடையில் கலக்கிறது. வடிகால் மற்றும் கல்வெர்ட் பாலம் பல ஆண்டுகளாக துார்வாரப்படவில்லை. இதனால் மண், கல், பிளாஸ்டிக் குப்பை குவிந்து அடைப்பு ஏற்பட்டு, மழை காலங்களில் கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடியது.
இதற்கு தீர்வு காணும் வகையில் கல்வெர்ட் பாலம் வழியாக செல்லும் வடிகாலை துார்வார, நெடுஞ்சாலை துறையிடம் நகராட்சி தரப்பில் அனுமதி கோரப்பட்டது. கல்வெர்ட் பாலத்தை சேதப்படுத்தாமல் வடிகாலை துார்வாரிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர். இதனால் பொக்லைன் இயந்திரம் மூலம் வடிகால் துார்வாரும் பணியில் நகராட்சி நிர்வாகம் களமிறங்கியுள்ளது. கல்வெர்ட் பாலம் வழியாக செல்லும் வடிகாலை துார்வார சாலையின் மத்தியில் துளை அமைத்து மோட்டார் மூலம் அடைப்புகளை வெளியேற்றும் பணி தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மூன்று சாலை சந்திப்பில் நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.