/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேர்தல் பறக்கும் படையால் இதுவரை ரூ.2.25 கோடி பறிமுதல்
/
தேர்தல் பறக்கும் படையால் இதுவரை ரூ.2.25 கோடி பறிமுதல்
தேர்தல் பறக்கும் படையால் இதுவரை ரூ.2.25 கோடி பறிமுதல்
தேர்தல் பறக்கும் படையால் இதுவரை ரூ.2.25 கோடி பறிமுதல்
ADDED : மார் 28, 2024 07:09 AM
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில் இதுவரை, 2.25 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் சந்திரசேகரன் என்பவரிடம், 2.22 லட்சம் ரூபாய், சத்தியமங்கலம் சாலையில் பைக்கில் வந்த சதீஸ்குமார் என்பவரிடம், 1 லட்சத்து, 22,400 ரூபாய், சென்னிமலை சாலை அலிகுஞ்சு சலீம் என்பவர் காரில் இருந்து, 5.82 லட்சம் ரூபாய், நசியனுார் சாலையில் அனுாப் என்பவர் காரில் எடுத்து வந்த, 7 லட்சம் ரூபாய், காளை மாட்டு சிலை பகுதியில் ஷாஜி என்பவர் காரில் எடுத்து வந்த, 2.50 லட்சம் ரூபாயை தேர்தல் பறிக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்ட அளவில் இதுவரை, 2 கோடியே, 25 லட்சத்து, 8,945 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில், உரிய ஆவணங்கள் தாக்கல் செய்ததால், 1 கோடியே, 23 லட்சத்து, 41,055 ரூபாயை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைத்தனர். மீதமுள்ள, 1 கோடியே, 1 லட்சத்து, 67,890 ரூபாய் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.

