ஈரோடு மாவட்டத்தில் 1,427 துப்பாக்கிகளுக்கு பாதுகாப்பு
ஈரோடு மாவட்டத்தில் 1,427 துப்பாக்கிகளுக்கு பாதுகாப்பு
ADDED : மார் 19, 2026 04:29 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், தற்காப்பிற்காக பயன்படுத்தி வந்த உரி-மையாளர்களிடம் இருந்து, துப்பாக்கிகள் பெறப்பட்டு, பாது-காப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகா-ரிகள் தெரிவித்தனர்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்.,23ல் நடக்கிறது. இதை-யொட்டி, ஈரோடு மாவட்டத்தில் தற்காப்பிற்காக உரிமம் பெற்று, துப்பாக்கி வைத்து இருப்பவர்கள் உடனடியாக அவற்றை அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டும் என, மாவட்ட தேர்தல் அலுவலர் கந்தசாமி தெரிவித்திருந்தார்.இதன்படி ஈரோடு மாவட்டத்தில் பிஸ்டல், ரைபிள், ஒற்றை மற்றும் இரட்டை குழல் என, 1,427 துப்பாக்கிகளை உரிமம் பெற்று வைத்துள்ள உரிமையாளர்கள், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைத்துள்ளனர்.
போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'ஈரோடு மாவட்டத்தில், 5 போலீஸ் சப்-டிவிசன்களில் உரிமம் பெற்று துப்பாக்கிகளை வைத்-துள்ளவர்களிடம், 100 சதவீதம் பெறப்பட்டு, போலீஸ் ஸ்டேஷன்களிலும், பாதுகாப்பு மையத்திலும் ஒப்படைக்கப்பட்-டுள்ளது. வங்கி பணம், நகை பாதுகாப்பு, சில முக்கிய பாதுகாப்பு பணிக்காக, 96 துப்பாக்கிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்-டுள்ளது,' என்றனர்.
