/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஒரே நாளில் தட்டச்சு, செய்முறை தேர்வு:பிளஸ் 1 மாணவர்கள் அதிர்ச்சி
/
ஒரே நாளில் தட்டச்சு, செய்முறை தேர்வு:பிளஸ் 1 மாணவர்கள் அதிர்ச்சி
ஒரே நாளில் தட்டச்சு, செய்முறை தேர்வு:பிளஸ் 1 மாணவர்கள் அதிர்ச்சி
ஒரே நாளில் தட்டச்சு, செய்முறை தேர்வு:பிளஸ் 1 மாணவர்கள் அதிர்ச்சி
ADDED : பிப் 21, 2024 01:07 AM
ஈரோடு:தற்போது பிளஸ் 1 மாணவர்களுக்கு, செய்முறை தேர்வு நடந்து வருகிறது. வரும், 24ல் நிறைவு பெறுகிறது.அதே
தினத்தில் தட்டச்சு தேர்வும் நடக்கும் என அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் எதை எதிர்கொள்வது என
தெரியாமல் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதுபற்றி பெற்றோர்
கூறியதாவது: பள்ளி படிப்பின் இடையே பிற தகுதிகளை வளர்த்து கொள்ளும்
விதமாக தட்டச்சு பயில்கின்றனர். தற்போது செய்முறை தேர்வுடன்,
தட்டச்சு தேர்வும் ஒரே நாளில் வருகிறது. அரசு துறைகள் ஒன்றுடன் ஒன்று
ஒருங்கிணைந்து பேசி தேர்வை நடத்தினால் மாணவ,மாணவிகளுக்கு
பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு கூறினர்.
பள்ளி கல்வி துறையினர்
கூறியதாவது: பள்ளி கல்வி துறை இயக்குனர் அறிவுறுத்தலின்படியே
திட்டமிட்டபடி செய்முறை தேர்வு நடக்கிறது.
பள்ளி கல்வித்துறையால் இவ்விவகாரத்தில் ஏதும் செய்ய இயலாது.இவ்வாறு கூறினர்.