/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அனுமதியின்றி விற்பனை - விதி மீறி பட்டாசு வெடிப்பு மாவட்ட அளவில் எட்டு வழக்குகள் பதிவு
/
அனுமதியின்றி விற்பனை - விதி மீறி பட்டாசு வெடிப்பு மாவட்ட அளவில் எட்டு வழக்குகள் பதிவு
அனுமதியின்றி விற்பனை - விதி மீறி பட்டாசு வெடிப்பு மாவட்ட அளவில் எட்டு வழக்குகள் பதிவு
அனுமதியின்றி விற்பனை - விதி மீறி பட்டாசு வெடிப்பு மாவட்ட அளவில் எட்டு வழக்குகள் பதிவு
ADDED : நவ 02, 2024 01:05 AM
ஈரோடு, நவ. 2-
தீபாவளி பண்டிகையை ஒட்டி ஈரோடு மாவட்டத்தில், 249 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில்லாமல் நிரந்தர பட்டாசு கடைகளும் செயல்பட்டன. இந்நிலையில் போலீசாரின் சோதனையில், மாவட்ட அளவில், 5 இடங்களில் அனுமதி இன்றி தற்காலிக பட்டாசு கடை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். தீபாவளி தினத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசு வெடித்ததாக ஈரோடு டவுன் போலீஸ், சூரம்பட்டி மற்றும் தாலுகா போலீசார் தலா ஒரு வழக்கு என, மூன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குடிசை முற்றிலும் எரிந்து
புன்செய் புளியம்பட்டி காந்திநகர் இரண்டாவது வீதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார், 35; வாடகை வாகன உரிமையாளர். மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூர் சென்றுவிட்ட நிலையில் இவரின் தாயார் சரசாள் மட்டும் வீட்டில் இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வெளியே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்பபோது வீட்டு மாடியில் தென்னை ஓலையால் அமைக்கப்பட்டிருந்த குடிசையில் ராக்கெட் பட்டாசு விழுந்ததில் தீப்பிடித்து எரிந்தது.
அப்பகுதி மக்களே அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்தது. பீரோ, வீட்டு உபயோகப் பொருட்களும் எரிந்து சேதமாகி விட்டது. இதுகுறித்து புன்செய் புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
எரிந்த தென்னை மரம்
பவானிசாகர் நகர் பகுதி முன்னாள் ராணுவத்தினர் காலனியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு பட்டாசு வெடித்தனர். அப்போது ஒரு ராக்கெட் பட்டாசு அருண்குமார் என்பவரது வீட்டு தென்னை மரத்தில் விழுந்து எரிய தொடங்கியது. சத்தி தீயணைப்பு நிலைய வீரர்கள் மரத்தின் மீது தணண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
ஈரோட்டில்....
ஈரோடு வளையக்கார வீதியில், ராக்கெட் பட்டாசு விழுந்ததில், ஒரு கீற்று கொட்டகை, மாணிக்கம்பாளையத்தில் ஒரு அலுவலகம் முன் போட்டிருந்த கீற்று கொட்டகை, பார்க் சாலையில் லாரி புக்கிங் அலுவலகம் முன் கீற்று கொட்டகை எரிந்தது.

