/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் முதல் முறையாக ரோபோட்டிக் மூட்டு ஆப்பரேஷன்
/
ஈரோட்டில் முதல் முறையாக ரோபோட்டிக் மூட்டு ஆப்பரேஷன்
ஈரோட்டில் முதல் முறையாக ரோபோட்டிக் மூட்டு ஆப்பரேஷன்
ஈரோட்டில் முதல் முறையாக ரோபோட்டிக் மூட்டு ஆப்பரேஷன்
ADDED : செப் 13, 2024 06:39 AM
ஈரோடு: ஈரோடு, இ.வி.என்.,சாலை, பூசாரி சென்னிமலை வீதியில் உள்ள எஸ்.கே.மருத்துவமனையில், ஈரோட்டில் முதன் முறையாக ரோபோட்டிக் முறையில், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை துவக்க விழா வரும், ௧௫ம் தேதி நடக்கிறது. இந்த விழா சித்தோடு எஸ்,கே., மஹாலில் நடக்கிறது.
அமைச்சர் முத்துசாமி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை மருத்துவமனை மருத்துவர்கள் சக்திவேல், இயக்குனர் விஜயகுமாரி, குமரவேல், நவீனா குமரவேல் மற்றும் மேனேஜர் ஜீவா, ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை குறித்து, சிறப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் குமரவேல் கூறியதாவது: ரோபோடிக் அறுவை சிகிச்சையில் குறைந்த திசு சேரோபோடிக் மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சையில் குறைந்த திசு சேதம், குறைந்த வலி, குறைந்த ரத்த இழப்பு, நுாறு சதவீத துல்லிய சிகிச்சை, இயல்பான செயல்பாட்டுக்கு விரைவாக குணமடைதல் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கப்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

