/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கட்டாய கல்வி உரிமை சட்டம் விண்ணப்பிக்க அழைப்பு
/
கட்டாய கல்வி உரிமை சட்டம் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஏப் 21, 2024 02:04 AM
ஈரோடு:குழந்தைகளுக்கான
இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டப்படி வரும் கல்வியாண்டுக்கு அனைத்து
சிறபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட,
நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, 25 சதவீத இடஒதுக்கீடு
வழங்கப்படுகிறது.
இதற்காக வரும், 22 முதல் மே, 20க்குள் rte.tnschools.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு
மாவட்டத்தில் உள்ள மெட்ரிக், சுயநிதி, துவக்க, மழலையர் பள்ளியில், 25
சதவீத இட ஒதுக்கீட்டில் சேரலாம். எல்.கே.ஜி., மற்றும் 1ம் வகுப்புக்கு
விண்ணப்பிக்க வீட்டு முகவரியில் இருந்து, பள்ளிக்கு அருகே, 1
கி.மீ.,க்குள் இருக்க வேண்டும். தகுதியானவர்கள், ஈரோடு சி.இ.ஓ.,
அலுவலகம், டி.இ.ஓ., அலுவுலகங்கள், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார
வளமையம், 14 வட்டார கல்வி அலுவலகங்களிலும் மற்றும் ஆன்லைனிலும்
விண்ணப்பிக்கலாம்.
குழந்தையின் சமீபத்திய போட்டோ, பிறப்பு
சான்றிதழ், ரேஷன் கார்டு, ஜாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று
ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். இவற்றை பதிவேற்றம் செய்யும்போது,
குழந்தையின் புகைப்படமும் பதிவேற்றப்பட வேண்டும். இத்தகவலை
கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

