/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பறிமுதலான ரூ.5.52 லட்சம் திரும்ப வழங்கல்
/
பறிமுதலான ரூ.5.52 லட்சம் திரும்ப வழங்கல்
ADDED : ஜன 15, 2025 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு,:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பறக்கும் படையினர், 5 பேரிடம் இருந்து, 5.52 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்து, கருவூலத்தில் செலுத்தி இருந்தனர்.
அவர்கள் ஐந்து பேரும் உரிய ஆவணங்களை சமர்பித்ததால், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவுப்படி, அப்பணம் உரியவர்களுக்கு முழுமையாக திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
இதன்படி, நிர்மலா என்பவரிடம், 50,860 ரூபாய், முஸ்தபாவிடம், 1 லட்சம் ரூபாய், சண்முகத்திடம், 1.80 லட்சம் ரூபாய், பப்லு என்பவரிடம், 1.22 லட்சம் ரூபாய், சரவணனிடம், 1 லட்சம் ரூபாய் என அனைவரிடமும் ரொக்கப்பணமாக ஒப்படைக்கப்பட்டது.

