/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற தீர்மானம்
/
மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற தீர்மானம்
ADDED : அக் 25, 2024 01:01 AM
மின்சார திருத்த சட்டத்தை
திரும்ப பெற தீர்மானம்
ஈரோடு, அக். 25-
இந்திய கம்யூ., கட்சி சார்ந்த, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின், மேற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. மாநில துணை தலைவர் துளசிமணி தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் இந்திரஜித், பிரச்னைகள் குறித்து பேசினார். ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நெல், கரும்பு, கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும். புதிய மின்சார திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தை அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் நடத்த
வேண்டும்.
பயிர்களில் மரபணு மாற்று எதிர்ப்பு குறித்து, நிபுணர்கள் கருத்தை தெரிவிக்கும் வகையில் இம்மாத இறுதியில் மாநாடு நடத்துவது, என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

