/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அத்தாணி அருகே 3௩ சென்ட் ஆக்கிரமிப்பு இடம் மீட்பு
/
அத்தாணி அருகே 3௩ சென்ட் ஆக்கிரமிப்பு இடம் மீட்பு
ADDED : செப் 24, 2024 02:56 AM
அந்தியூர்: அத்தாணி அருகே குப்பாண்டம்பாளையம் பஞ்., செங்காட்டுத் தோட்டத்தில், சிவப்பிரகாஷ் என்பவர், 27.5 சென்ட் நிலவியல் ஓடை பகுதியை ஆக்கிரமித்து, தென்னை மரங்கள் மற்றும் காம்பவுண்ட் சுவர் கட்டியிருந்தார்.
இதேபோல் சுதாகர் என்பவர், 5.5 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து, நெல் சாகுபடி செய்திருந்தார். இதை அகற்ற அதே பகுதியை சேர்ந்த சீரங்கன், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.இதை தொடர்ந்து அந்தியூர் தாசில்தார் கவியரசு தலைமையிலான வருவாய் துறையினர், ஆப்பகூடல் போலீசார், 20க்கு மேற்பட்டோர் சென்றனர். ஜே.சி,பி., இயந்திரம் மூலம் ஆக்கரமிப்பு செய்த இடத்தை அகற்றினர்.
முன்னதாக ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, தற்கொலை நாடகமாடினர். நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, எவ்வித கருணையும் காட்ட முடியாது என்பதை அதிகாரிகள் உணர்த்தி, ஆக்கிரமிப்பை அகற்றினர்.

