/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அ.தி.மு.க., சார்பில் புத்தாடை
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அ.தி.மு.க., சார்பில் புத்தாடை
மாற்றுத்திறனாளிகளுக்கு அ.தி.மு.க., சார்பில் புத்தாடை
மாற்றுத்திறனாளிகளுக்கு அ.தி.மு.க., சார்பில் புத்தாடை
ADDED : மே 18, 2024 01:33 AM
ஈரோடு: சட்டசபை எதிர்கட்சி தலைவரும், அ.தி.மு.க., பொது செயலாளருமான பழனிசாமி பிறந்தநாள், ஈரோடு மாவட்ட அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்றம் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.
இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ.,வும், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளருமான தென்னரசு தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடை வழங்கினார். மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி, ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் வீரக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., பாலு, முன்னாள் துணை மேயர் பழனிசாமி, பகுதி செயலாளர் மனோகரன், அவை தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.