/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இன்று பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
/
இன்று பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
ADDED : மார் 09, 2024 01:18 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 10 தாலுகாவிலும் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் இன்று நடக்கிறது.
இதன்படி ஈரோடு தாலுகாவுக்க்கு காளிங்கராயன்பாளையம் மேட்டுநாசுவம்பாளையம் ரேஷன் கடையில் நடக்கிறது. பெருந்துறை - செல்லப்பம்பாளையம், மொடக்குறிச்சி - கனகபுரம், கொடுமுடி - நாகமநாயக்கன்பாளையம், கோபி - கலிங்கியம், நம்பியூர் - கோசனம், பவானி - மைலம்பாடி, அந்தியூர் - பிரம்மதேசம் -2, சத்தியமங்கலம் - அரியப்பம்பாளையம், தாளவாடி - ஒசூர் ரேஷன் கடையில் முகாம்
நடக்கிறது.
இதில் மாவட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். புதிய ரேஷன் கார்டு, நகல் ரேஷன் கார்டு, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல், கைபேசி எண் இணைத்தல் போன்ற கோரிக்கைகளுக்கு மனு அளித்து தீர்வு
பெறலாம்.

