/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சி: இளைஞரணி துணை செயலர் அழைப்பு
/
அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சி: இளைஞரணி துணை செயலர் அழைப்பு
அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சி: இளைஞரணி துணை செயலர் அழைப்பு
அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சி: இளைஞரணி துணை செயலர் அழைப்பு
ADDED : பிப் 08, 2024 12:07 PM
ஈரோடு: ஈரோட்டில் இன்று நடக்க உள்ள, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா குறித்து, தி.மு.க., இளைஞரணி மாநில துணை செயலர் மற்றும் மேற்கு மண்டல இளைஞரணி பொறுப்பாளர் பிரகாஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தி.மு.க., இளைஞரணி செயலர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரான உதயநிதி, ஒவ்வொரு மாவட்டமாக சென்று வளர்ச்சி திட்டப்பணிகளை துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை, 10:00 மணிக்கு மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட, சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நடக்க உள்ள அரசு விழாவில் பங்கேற்று, மகளிர் குழுவினர், பொதுமக்கள் என, 13,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மேலும், 200 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்து, 34 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பேசுகிறார்.
விழாவில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் மற்றும் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். எனவே, அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

