/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தனியார் கம்பெனி பஸ் கவிழ்ந்து 20 தொழிலாளர்கள் காயம்
/
தனியார் கம்பெனி பஸ் கவிழ்ந்து 20 தொழிலாளர்கள் காயம்
தனியார் கம்பெனி பஸ் கவிழ்ந்து 20 தொழிலாளர்கள் காயம்
தனியார் கம்பெனி பஸ் கவிழ்ந்து 20 தொழிலாளர்கள் காயம்
ADDED : அக் 25, 2024 12:58 AM
தனியார் கம்பெனி பஸ் கவிழ்ந்து
20 தொழிலாளர்கள் காயம்
பெருந்துறை, அக். 25-
பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் ரெடிமேட் ஆடை நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு பஸ், நேற்று காலை பெத்தாம்பாளையம் பகுதியில் தொழிலாளர்களை அழைத்துக் கொண்டு வந்தது. புளியங்காடு அருகில் முன்னால் சென்ற தனியார் கல்லுாரி பஸ்சை முந்தியபோது, சாலையோர சகதியில் சிக்கி நிலை தடுமாறி ஒரு பக்கமாக கவிழ்ந்தது. இதில் டிரைவர் உள்பட, ௨௦ தொழிலாளர்கள் காயமடைந்தனர். அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர். ஒரு பெண் தொழிலாளி மட்டும், மூக்கில் வீக்கம் இருப்பதால் உள் நோயாளியாக சிகிச்சையில் உள்ளதாக, பெருந்துறை போலீசார் தெரிவித்தனர்.