sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

முதல் ஓட்டு போட்டது பெருமை: இளம் வாக்காளர் கருத்து

/

முதல் ஓட்டு போட்டது பெருமை: இளம் வாக்காளர் கருத்து

முதல் ஓட்டு போட்டது பெருமை: இளம் வாக்காளர் கருத்து

முதல் ஓட்டு போட்டது பெருமை: இளம் வாக்காளர் கருத்து


ADDED : ஏப் 20, 2024 07:17 AM

Google News

ADDED : ஏப் 20, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : 'ஓட்டுப்பதிவு செய்தது பெருமையாக உள்ளது. எங்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றும் அரசாக அமைய வேண்டும்' என்று, ஈரோட்டில் முதல் முறையாக ஓட்டு போட்ட வாக்காளர்கள் தெரிவித்தனர்.

கல்லுாரி மாணவி நிவேதா, 21, வீரப்பன்சத்திரம்: முதன்முறையாக ஓட்டுப்பதிவு செய்வது ஆசையாக இருந்தது. பெண்கள் சுய தொழிலில் முன்னேற்றம் அடைய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் அரசு அமைய வேண்டும்.மாணவர் சரபேஸ், 22, இடையன்காட்டுவலசு: முதன்முறையாக ஓட்டுப்பதிவு செய்வது திரில்லிங்காக இருந்தது. ஊருக்காக, நாட்டுக்காக உழைப்பவர் வர வேண்டும். அனைத்து இடங்களிலும் தொழில் நிறுவனங்களை உருவாக்கினால்தான், படித்தவர்கள் வேலைவாய்ப்பை பெற வாய்ப்பாகும். அதை திட்டமிடும் அரசு அமைய வேண்டும்.மாணவி கிருத்திகா, 20, திருநகர் காலனி, ஈரோடு: முதல் ஓட்டை பதிவு செய்ய வேண்டும் என ஆர்வமாக காத்திருந்தேன். நுழைவு தேர்வுகள், போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை உருவாக்கும் அரசு ஏற்படுத்த வேண்டும்.யாமினி, 20, திருநகர் காலனி, ஈரோடு: முதல் ஓட்டை பதிவு செய்தது பெருமையாக உள்ளது. அதிகமாக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும்படியான அரசு அமைய வேண்டும்.சத்யா, திருநகர் காலனி, ஈரோடு; முதல் ஓட்டு என்பதால், காலையிலேயே ஓட்டை பதிவு செய்து வந்துவிட்டேன். படிக்கும் மாணவர்களுக்கு முழு அளவாக அல்லது அவர்களின் தேவைக்கு ஏற்ப 'ஸ்காலர்ஷிப்', கல்வி கடன் வழங்கும் சட்டத்தை இயற்றும் அரசு ஏற்பட வேண்டும்.கிஷோர், 20, வீரப்பன்சத்திரம்: முதல் ஓட்டு என்பதை பெருமையாக பதிவு செய்து வந்துள்ளேன். தொழில் நுட்ப கல்வி, அதற்கான படிப்புகள், அதற்கு தேவையான ஆய்வு கூடங்கள் உருவாக்கும்படி அரசு அமைய வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us