/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாலிடெக்னிக் மாணவன் துாக்கிட்டு தற்கொலை
/
பாலிடெக்னிக் மாணவன் துாக்கிட்டு தற்கொலை
ADDED : செப் 27, 2024 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தை அடுத்த பெரிய கொடிவேரி தாகூர் வீதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரின் மனைவி கருத்து வேறுபாட்டால், ஒரு மகன், மகளுடன் வசிக்கிறார். மூத்த மகன் பிரவீன்குமார், 19; பெரிய கொடிவேரி தாகூர் வீதியில் பாட்டியுடன் வசித்தார். பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ இரண்டாமாண்டு படித்தார்.
நேற்று முன்தினம் கல்லுாரிக்கு சென்றவர், வாட்ஸ் ஆப்பில் நண்பருக்கு தகவல் அனுப்பிவிட்டு, துாக்கில் தற்கொலை செய்து கொண்டார். பங்களாபுதுார் போலீசார் விசாரணையில், கல்லுாரியில் ஒரு மாணவியை காதலித்து வந்ததும், அவர் வீட்டுக்கு தெரிந்ததால் பிரச்னை ஏற்பட்டதால், தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

