/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரும் 27 ல் பி.எப்., குறைதீர் கூட்டம்
/
வரும் 27 ல் பி.எப்., குறைதீர் கூட்டம்
ADDED : மே 25, 2025 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு :தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் இ.எஸ்.ஐ., சார்பில் ஈரோடு வேளாளர் மகளிர் கல்லுாரி கருத்தரங்கு கூடத்தில், மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம் வரும், 27ல் நடக்க உள்ளது.
இதில் சந்தாதாரர்கள் காலை, 9:30 முதல் மதியம், 1:00 மணி வரை, தொழிலதிபர்கள், விலக்களிக்கப்பட்ட நிறுவனங்கள் மதியம், 2:00 முதல் மாலை, 5:30 மணி வரை பங்கேற்று குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம். முந்தைய கூட்டங்களில் மனு அளித்து, நிலுவையில் உள்ளவர்களும், அதுகுறித்த விபரங்கள், ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

