/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தலமலை சாலையில் வாகனங்களில் கால்நடைகளை ஏற்ற அனுமதி கோரி மனு
/
தலமலை சாலையில் வாகனங்களில் கால்நடைகளை ஏற்ற அனுமதி கோரி மனு
தலமலை சாலையில் வாகனங்களில் கால்நடைகளை ஏற்ற அனுமதி கோரி மனு
தலமலை சாலையில் வாகனங்களில் கால்நடைகளை ஏற்ற அனுமதி கோரி மனு
ADDED : செப் 27, 2024 01:19 AM
தலமலை சாலையில் வாகனங்களில்
கால்நடைகளை ஏற்ற அனுமதி கோரி மனு
ஈரோடு, செப். 27-
ஈரோடு மாவட்டம் தாளவாடி, தலமலை பகுதி கால்நடை வியாபாரிகள், விவசாயிகள் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது:
தாளவாடி, தலமலை உள்ளிட்ட சுற்று வட்டார மலை கிராமங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளை விற்பனை செய்வதற்காக, அந்தியூர், புளியம்பட்டி உள்ளிட்ட வாரச்சந்தைகளுக்கு, 25 ஆண்டுகளுக்கு மேலாக வாகனங்கள் மூலம் கொண்டு செல்கிறோம்.
பல ஆண்டுகளாக தலமலை சாலையை நம்பியே கால்நடை விற்பனை செய்து வந்த எங்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது. கால்நடைகளை விலை கொடுத்து வாங்கி, முறையாக மருத்துவரிடம் அனுமதி சீட்டு பெற்று வணிகம் செய்து வருகிறோம்.
இத்தொழிலை முடக்க சிலர், கடத்தல், மாபியா கும்பல் என பொய்யான தகவல், வதந்திகளை பரப்பி, வாழ்வாதாரத்தை கேள்விகுறியாக்கி வருகின்றனர். இன்றைய (நேற்றைய) சந்தைக்கு செல்ல வேண்டிய கால்நடைகளை கொண்டு செல்ல முடியாமல் முடங்கி விட்டோம். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, வனத்துறையுடன் இணைந்து தலமலை சாலை வழியாக வாகனங்களை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

