/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆடி 18ல் ப.வேலுார் காவிரி ஆற்றில் பரிசல் போட்டி நடத்த தடை விதிப்பு
/
ஆடி 18ல் ப.வேலுார் காவிரி ஆற்றில் பரிசல் போட்டி நடத்த தடை விதிப்பு
ஆடி 18ல் ப.வேலுார் காவிரி ஆற்றில் பரிசல் போட்டி நடத்த தடை விதிப்பு
ஆடி 18ல் ப.வேலுார் காவிரி ஆற்றில் பரிசல் போட்டி நடத்த தடை விதிப்பு
ADDED : ஜூலை 29, 2025 01:59 AM
ப.வேலுார், நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் காவிரி ஆற்றில், ஆடி, -18 அன்று நடக்க இருந்த பரிசல் போட்டிக்கு தடைவிதித்து, நீர்
வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து, ப.வேலுார் நீர்
வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால், அணையில் இருந்து, ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் பொதுமக்களின் நலன்கருதி, வரும் ஆக., 3ல் ஆடிப்பெருக்கு அன்று நடக்க இருந்த பரிசல் போட்டி ரத்து செய்யப்படுகிறது.
மேலும், அன்று, ப.வேலுார், பொத்தனுார் காவிரி ஆற்றில் குளிக்கவும், முளைப்பாரி விடவும் தடைவிதிக்கப்படுகிறது. தடையை மீறி காவிரி ஆற்றுக்குள் செல்ல முற்பட்டால், போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதேபோல், காவிரி ஆற்றுக்கு பொதுமக்கள் செல்லாமல் இருக்க, ப.வேலுார் டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில், கரையோரம் உள்ள காசிவிஸ்வநாதர் கோவில் அருகே, 'பேரிகார்டு'களை வைத்து, துாய்மை பணியாளர்கள் மூலம் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டுள்ளனர்.

