sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

/

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு


ADDED : பிப் 08, 2024 12:04 PM

Google News

ADDED : பிப் 08, 2024 12:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரூ.5.40 லட்சத்திற்கு

வாழைத்தார் விற்பனை

அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில், வாழை விற்பனை நடந்தது. வரத்தான கதளி ரக வாழை கிலோ 28 ரூபாய், நேந்திரம், 22 ரூபாய், பூவன் தார், 380 ரூபாய், செவ்வாழை, 580, ரஸ்தாளி, 530, மெந்தன் தார், 420 ரூபாய்க்கு என, 2,000 வாழைத்தார்கள் வரத்தாகி, 5.40 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாணவிகளுக்கு சைக்கிள்

அம்மாபேட்டை அடுத்த, வெள்ளித்திருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் பங்கேற்று, பிளஸ் 1 பயிலும், 188 மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கி பேசினார்.

அம்மாபேட்டை தி.மு.க., ஒன்றிய செயலர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் சம்பத் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ரயில் மோதி அடையாளம்தெரியாத வாலிபர் பலி

சாவடிபாளையம் - ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு இடையே, ரயில் தண்டவாளத்தில் பெயர், அடையாளம் தெரியாத, 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக கடந்த, 6 காலை ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரயில்வே போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த, 6 காலை தண்டவாளத்தை கவனக்குறைவாக கடந்த போது, அவ்வழியே வந்த ரயில் மோதியதில் உடல் நசுங்கி அதே இடத்தில் பலியானது தெரியவந்தது. எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.

ரூ.15.22 லட்சத்திற்கு

பருத்தி விற்பனை

அந்தியூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள், அவர்களது தோட்டத்தில் விளைவித்த பி.டி.ரக பருத்தியை விற்பனைக்காக, அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்தனர்.

இதில், 688 பி.டி., ரக பருத்தி மூட்டைகள் வரத்தாகி, கிலோ, 64.19 - 69.19 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 15.22 லட்சம் ரூபாய்க்கு பருத்தி விற்பனையானதாக விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

மனைவி மாயமானதாகபோலீசில் கணவர் புகார்

கோபி அருகே பச்சமலை ரோட்டை சேர்ந்தவர் திவ்யா, 28. இவர், கோபியில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக பணிபுரிந்தார். கடந்த, 2ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி வெளியே புறப்பட்டு சென்றவர், அதன்பின் மீண்டும் வீடு திரும்பவில்லை.

அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அவரது கணவர் சம்பத்குமார், 40, கொடுத்த புகார்படி, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கோபி தாலுகா பகுதியில்ஜனவரியில் மழையில்லை

கோபி தாலுகாவில், கடந்த ஜனவரி மாதத்தில் சராசரியாக பெய்ய வேண்டிய மழையளவு கூட பொழிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

கோபி தாலுகாவில், மாதந்தோறும் பெய்ய வேண்டிய சராசரி மழையளவு கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரியில், 18.5 மி.மீ., மழை சராசரியாக பெய்ய வேண்டும். அதேபோல், ஆண்டுக்கு 12 மாதத்தில், 785.3 மி.மீ., மழை பெய்ய வேண்டும்.

ஆனால், நடப்பாண்டு, 2024 துவங்கிய ஜனவரி மாதத்தில், 31 நாட்களில் ஒரு நாள் கூட மழை பெய்யவில்லை. அதேசமயம், தற்போது பகலில் கடும் வெயிலும், தைமாதம் என்பதால், இரவு நேரத்தில் கடும் பனிபொழிவும் உள்ளது.

மல்லிகை கிலோரூ.1,860க்கு ஏலம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில், நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை பூ கிலோ, 1,860 ரூபாய்க்கு ஏலம் போனது.

முல்லை, 1,295, காக்கடா, 525, ஜாதி முல்லை, 600, செண்டுமல்லி, 24, கோழிகொண்டை, 78, சம்பங்கி, 50, அரளி, 120, துளசி, 40, செவ்வந்தி, 100 ரூபாய்க்கு விற்பனையானது

புற்றுநோய் தடுப்பு

விழிப்புணர்வு முகாம்

ஈரோடு அடுத்த, சித்தோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற்றுநோய் தடுப்பு மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

ஈரோடு சுகாதார பணிகள் மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார் தலைமை வகித்தார். புகையிலை பயன்பாடுகளால் ஏற்படும் தீமை, உடல் நல பாதிப்பு, புகையிலை தடுப்பு சட்டங்கள், மீட்பு ஆலோசனை, புற்றுநோய்க்கான காரணிகள், உடல் பாதிப்பு, பரிசோதனை முறை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா, வட்டார மருத்துவ அலுவலர் மகாலட்சுமி, டாக்டர் லட்சுமி பார்வதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

ரூ.1.67 கோடிக்கு

கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 1.67 கோடி ரூபாய்க்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 5,075 மூட்டைகளில், இரண்டு லட்சத்து, 4,000 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், முதல் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, 77.20, அதிகபட்சமாக, 88.93 ரூபாய்க்கு விற்பனையாயின. இரண்டாம் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக, 20, அதிகபட்சமாக, 83.66 ரூபாய்க்கு விற்பனையாயின. மொத்தம், 1. 67 கோடி ரூபாய்க்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

வனப்பகுதியில் மின்மாற்றி அமைக்க பூமி பூஜை

அந்தியூர் அருகே பர்கூர் வனப்பகுதி அடிவாரத்தில் அமைந்துள்ளது காக்காயனூர் மலை கிராமம். இப்பகுதியில், வேளாண்மை திட்டத்தின் கீழ், 102 ஏக்கர் விவசாய நிலத்தை, அப்பகுதியில் வசிக்கும், 45 குடும்பத்திற்கு பிரித்து கொடுத்து, அந்த நிலத்தில் விவசாயத்திற்கு தேவையான நீர்ப்பாசனம் அமைத்து, மின் இணைப்புகள் வழங்கிட, 25 லட்சம் ரூபாய் மதிப்பில், மின்மாற்றிகள் அமைப்பதற்கான பணி நடந்தது. இதற்கான பூமி பூஜை விழாவை அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் துவக்கி வைத்தார். மின்துறை அதிகாரிகள், கட்சியினர் பங்கேற்றனர்.

வரும் 10ல் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்

ஈரோடு மாவட்டத்தில், பொது வினியோக திட்ட குறைதீர் நாள் முகாம் வரும், 10ல் அனைத்து தாலுகாவிலும் தலா ஒரு ரேஷன் கடையில் நடக்க உள்ளது.

இம்முகாமில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தல், நகல் ரேஷன் கார்டு பெறுதல், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், கைபேசி எண் இணைத்தல் மற்றும் மாற்றம் செய்தல் போன்றவைகளுக்கு மனு வழங்கி தீர்வு பெறலாம்.

இதன்படி, ஈரோடு தாலுகா - வீரப்பம்பாளையம் ரேஷன் கடையிலும், பெருந்துறை மூங்கில்பாளையத்திலும், மொடக்குறிச்சி - சின்னியம்பாளையம், கொடுமுடி - கோட்டைகாட்டுவலசு, கோபி - கரும்பாறை, நம்பியூர் - பொலவபாளையம், பவானி - சித்தார், அந்தியூர் - ஆலம்பாளையம், சத்தியமங்கலம் - ராஜன் நகர், தாளவாடி - நெய்தாளபுரத்திலும் உள்ள ரேஷன் கடைகளில் முகாம் நடக்க உள்ளது.

பாரியூர் கோவிலில் ரூ.22.65 லட்சம் காணிக்கை

பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் வகையறா கோவில்களின், 14 உண்டியல்கள் திறந்ததில், 22.65 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

கோபி, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், பத்து நிரந்தர உண்டியல், நான்கு திருவிழாக்கால உண்டியல் என மொத்தம், 14 உண்டில்கள் வைக்கப்பட்டிருந்தது. அறநிலையத்துறை துணை கமிஷனர் மேனகா, ஆய்வாளர் ஹரி, செயல் அலுவலர் ரத்தினாம்பாள் ஆகியோர் தலைமையில், 14 உண்டியல்கள் நேற்று மதியம், 2:00 மணிக்கு திறக்கப்பட்டது. தன்னார்வலர்கள் மூலம் காணிக்கை கணக்கீடு செய்யம் பணி நேற்றிரவு, 8:30 மணிக்கு முடிந்தது.

இதில் தங்கம், 89 கிராம், வெள்ளி, 154 கிராம் மற்றும் அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐரோப்பா, சிங்கப்பூர் என வெளிநாட்டு பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர். தவிர, 22.65 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

காணிக்கைகள் அனைத்தும், கோபி யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், பாரியூர் கோவில் நிர்வாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதற்கு முன் கடந்த, 2023ல் செப்., 19ல், பத்து உண்டியல்கள் திறந்தபோது, 8.37 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்ததாக, அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.

பஸ்சை துரத்திய யானை

கூச்சலிட்ட பயணிகள்

கேர்மாளம் அருகே, குட்டியுடன் வந்த யானைகள் பஸ்சை துரத்தியதால் -பயணிகள் கூச்சலிட்டனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள, வனச்சரகங்களில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. நேற்று மாலை கேர்மாளம் சாலையில், சத்தியமங்கலம் நோக்கி பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய யானைகள் சாலையில் நின்று கொண்டிருந்தன. பஸ்சை பார்த்ததும் யானை துரத்தியது. பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். அதற்குள் பஸ்சை டிரைவர் கிளப்பியதால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

வாகனங்களை வழி

மறித்த ஒற்றை யானை

ஆசனுார் அருகே காரபள்ளம் சோதனை சாவடி அருகில், நேற்று மாலை வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை, சாலை நடுவில் நின்று கொண்டு ஹாயாக தீவனம் சாப்பிட்டு கொண்டிருந்தது. யானை நிற்பதை பார்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திக் கொண்டனர். பின்பு அரை மணி நேரம் கழித்து வனப்பகுதிக்குள் யானை சென்றது.

பூக்கள் விலை வீழ்ச்சி

பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில், 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மல்லி, முல்லை, சம்பங்கி பூக்கள் அதிக பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் பூக்கள், புன்செய் புளியம்பட்டியில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

முகூர்த்த சீசன் இல்லாததால் பூக்கள் விலை சரிந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பொங்கல் பண்டிகை, தைப்பூச விழாவை முன்னிட்டு ஒரு கிலோ மல்லிகை, 5,000 ரூபாய் வரை விற்பனையான நிலையில் நேற்று, 1,200 ஆக சரிந்துள்ளது. முல்லை ஒரு கிலோ, 2,500க்கு விற்றது, 1,000 ரூபாயாகவும், 250 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 50 ரூபாய்க்கு விற்பனையானது.

பெருந்துறையில் மொபட் திருட்டு

பெருந்துறை, சுபாஸ் சந்திரபோஸ் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ், 55. இவர் ஸ்டார் ெஹல்த் இன்சூரன்ஸ் ஏஜண்டாக உள்ளார். நேற்று முன்தினம் மாலை, பெருந்துறை பங்களா வீதியிலுள்ள இன்சூரன்ஸ் அலுவலகம் முன் தனது, டிவிஎஸ் ஜூபிடர் வாகனத்தை நிறுத்தி விட்டு, திரும்பி வந்து பார்த்தபோது காணவில்லை.

பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிளாஸ்டிக் ஆலைக்கு நோட்டீஸ்பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டைக்கு உட்பட்ட, கம்புளியம்பட்டி ஊராட்சியில் செயல்பட்டு வரும் ரோஷினி பாலிமர் என்ற ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு, பழைய பிளாஸ்டிக் பைகளை உருக்கி, பிளாஸ்டிக் கட்டிகளாக தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து தொடர்ந்து கரும்புகை, துாசுகள், கெட்ட துர்நாற்றம் வீசுவதாக சென்னிமலை யூனியன், பனியம்பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட குட்டப்பாளையம் பகுதி மக்கள் ஆலை முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெருந்துறை மாசுகட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர், ஆலையில் ஆய்வு நடத்தியதில் அனுமதியின்றி இரண்டு புதிய இயந்திரங்கள் நிறுவி அதை இயக்கியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, ஆலை மின் இணைப்பை ஏன் துண்டிக்கக் கூடாது என உரிமையாளரிடம் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மேலும், தற்காலிகமாக ஆலை செயல்படுத்துவதை நிறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us