/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பொலவக்காளிபாளையத்தில்நகராட்சி குப்பை அகற்றம்
/
பொலவக்காளிபாளையத்தில்நகராட்சி குப்பை அகற்றம்
ADDED : மே 08, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி:கோபி அருகே, பொலவக்காளிபாளையத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பையை, நகராட்சி துப்புரவு பணியாளர்கள் நேற்று அகற்றினர்.கோபி அருகே பொலவக்காளிபாளையத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் வழி உள்ளது. அதன் வழித்தடத்தில், நகராட்சிக்கு சொந்தமான வாகனத்தில், குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, அப்பகுதியில் குப்பை கொட்ட வந்த வாகனத்தை மடக்கி பிடித்து, மாவட்ட நிர்வாகத்துக்கும், கோபி நகராட்சிக்கும் நேற்று முன்தினம் சிலர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அடங்கிய குழுவினர் அங்கு குவிக்கப்பட்டிருந்த குப்பை கழிவுகளை அகற்றினர்.

