/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பருவமழை முன்னெச்சரிக்கை; காவிரி கரையில் விழிப்புணர்வு
/
பருவமழை முன்னெச்சரிக்கை; காவிரி கரையில் விழிப்புணர்வு
பருவமழை முன்னெச்சரிக்கை; காவிரி கரையில் விழிப்புணர்வு
பருவமழை முன்னெச்சரிக்கை; காவிரி கரையில் விழிப்புணர்வு
ADDED : நவ 08, 2024 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் சார்பில், கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரை பகுதியில் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். வடகிழக்கு பருவமழையால் குடியிருப்பு மற்றும் சுற்றுப்புற பகுதியில் வெள்ளம் சூழ்ந்தால் தப்பிக்கும் முறை, தண்ணீரில் சிக்கியவர்களை, மூழ்கியவர்களை காப்பாற்றும் விதம், அவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.