/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆட்டோவுக்கு தீ வைத்த மனநலம் பாதித்தவர் கைது
/
ஆட்டோவுக்கு தீ வைத்த மனநலம் பாதித்தவர் கைது
ADDED : டிச 23, 2024 09:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, ஜின்னா வீதி பின்புற பகுதியை சேர்ந்தவர் காதர் மொய்தீன், 48; நெய் ஸ்டோர் வைத்துள்ளார். இதற்கான பயன்பாட்டுக்கு காஸ் ஆட்டோ வைத்திருந்தார். வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ கடந்த, 20ம் தேதி நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் முழுவதும் சேதமானது.
ஈரோடு டவுன் போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், ஈரோடு, இந்திரா நகர், மோசிகீரனார் வீதியை சேர்ந்த உதயகுமார், 67, தீ வைத்ததை உறுதி செய்தனர். நேற்று முன்தினம் மாலை அவரை கைது செய்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிந்ததால் விடுவித்தனர்.

