ADDED : மே 02, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்:
அந்தியூர் அருகே ஜி.எஸ். காலனி
யில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பொங்கல் திருவிழாவுக்கான பூச்சாட்டுதல், 15 நாட்களுக்கு முன் நடந்தது. தினமும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தன. நேற்று நடந்த பொங்கல் விழாவில், மாவிளக்கு எடுத்தல், அலகு குத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை, கோவிலுக்கு வந்திருந்த சுற்று வட்டாரத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசித்து சென்றனர். மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் பண்டிகை இன்று நிறைவு பெறுகிறது.

