/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெண்ணிடம் மொபைல் போன் திருடியவர் கைது
/
பெண்ணிடம் மொபைல் போன் திருடியவர் கைது
ADDED : மே 23, 2024 06:54 AM
ஈரோடு : ஓடும் ரயிலில், பெண் பயணியிடம் மொபைல் போன் திருடிய சேலம் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஒசூர், சின்ன எலசகிரி பாலாஜி நகரை சேர்ந்த சங்கர் மனைவி செல்வி, 36. தன் தாயாரை பார்க்க ஒசூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் மைசூரு-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில், முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார். கடந்த, 21 நள்ளிரவு 1:50 மணிக்கு ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ரயில் கிளம்பி சிறிது துாரத்தில் சென்ற போது, செல்வி பாத்ரூம் சென்று விட்டு வந்து தன் இருக்கையில் வைத்திருந்த பேக்கில் பார்த்த போது, அதில் வைத்திருந்த, 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போன் காணாமல் போனது தெரியவந்தது.
ஈரோடு ரயில்வே போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் 21 மதியம், 12:10 மணிக்கு ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பார்சல் அலுவலகம் அருகே, சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து ரயில்வே போலீசார் விசாரித்தனர். இதில் அவர் சேலம் மாவட்டம், ஆத்துார் ஓலப்பாடி மேலுாரை சேர்ந்த சுப்பிரமணி, 31, என்பதும், பெண் பயணியிடம் மொபைல் போன் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.

