/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லோக்சபா தேர்தல் எதிரொலி: வணிக நிறுவனங்கள் மூடல்; சாலைகள் 'வெறிச்'
/
லோக்சபா தேர்தல் எதிரொலி: வணிக நிறுவனங்கள் மூடல்; சாலைகள் 'வெறிச்'
லோக்சபா தேர்தல் எதிரொலி: வணிக நிறுவனங்கள் மூடல்; சாலைகள் 'வெறிச்'
லோக்சபா தேர்தல் எதிரொலி: வணிக நிறுவனங்கள் மூடல்; சாலைகள் 'வெறிச்'
ADDED : ஏப் 20, 2024 07:17 AM
ஈரோடு : லோக்சபா தேர்தலால், ஈரோடு மாநகராட்சி பகுதிகளில், பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் மூடப்பட்டன.
ஓட்டளிக்க மக்கள் ஆர்வம் காட்டியதால், சாலைகள் வெறிச்சோடின. லோக்சபா தேர்தல் நாளான நேற்று, ௧௦௦ சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வகையில், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவன தொழிலாளர்களுக்கும், சம்பளத்துடன் விடுமுறை அளிக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.இதன்படி தேர்தல் தினமான நேற்று, ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களும், பிரதான சாலைகளில் பெரும்பாலான வணிக நிறுவனங்களும், உணவகங்களும் மூடப்பட்டிருந்தன. ஒரு சில பழக்கடைகள், ஓட்டல், டீக்கடைகள், பால் கடைகள், மருந்தகங்கள் மட்டும் திறந்திருந்தன. வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதாலும், விடுமுறை என்பதாலும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின.