ADDED : டிச 30, 2025 01:40 AM
* ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 85,000 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ கருப்பு தேங்காய், 54.19 - 60.99 ரூபாய், பச்சை தேங்காய், 40 - 51.89 ரூபாய், தண்ணீர் வற்றிய காய், 67.69 ரூபாய் என, 30,847 கிலோ தேங்காய், 15 லட்சத்து, 25,116 ரூபாய்க்கு விற்பனையானது.
* கோபி தாலுகா, சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்-பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 400 கிலோ தென்னங்கருப்பட்டி வரத்தானது. கிலோ, 142 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் கிலோவுக்கு இரண்டு ரூபாய் விலை கூடியது.
* கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 9,859 தேங்காய் விற்பனைக்கு வந்தது. கிலோ தேங்காய், 35 - 62.89 ரூபாய் என, 2,982 கிலோ தேங்காய், 1 லட்சத்து, 66,956 ரூபாய்க்கு விற்பனையானது. கொப்பரை தேங்காய், 474 மூட்டை வரத்தாகி, ஒரு கிலோ முதல் தரம், 163.89 - 199.99 ரூபாய், இரண்டாம் தரம், 124.99 - 188.17 ரூபாய் என, 22,556 கிலோ கொப்பரை தேங்காய், 37 லட்சத்து, 87,689 ரூபாய்க்கு விலை போனது. எள், 418 மூட்டை வரத்தானது. மஞ்சள் வெள்ளை எள் கிலோ, 93.09 - 119 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், 31,284 கிலோ எள், 35 லட்சத்து, 10,880 ரூபாய்க்கு விலை போனது.
* அந்தியூரில் நேற்று கூடிய வெற்றிலை சந்தைக்கு, 60 கூடை வெற்றிலை வரத்தானது. ராசி வெற்றிலை சிறியது ஒரு கட்டு, 25 ரூபாய், பெரிய கட்டு, 50 முதல் 55 ரூபாய், பீடா வெற்றிலை கட்டு, 35 முதல் 40, செங்காம்பு வெற்றிலை கட்டு, 10 முதல் 25 ரூபாய் வரை, 3.50 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 6,179 தேங்காய் வரத்தாகி, ஒரு காய் 14-43 ரூபாய்; 63 மூட்டைதேங்காய் பருப்பு வரத்தாகி கிலோ, 166-212 ரூபாய்; எட்டு மூட்டை எள் வரத்தாகி கிலோ, 113-145 ரூபாய்; ஒரு மூட்டை உளுந்து கிலோ, 42-58 ரூபாய்; மூன்று மூட்டை பச்-சைப்பயிறு வரத்தாகி கிலோ, 94 ரூபாய்க்கும் விற்றது.

