/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொங்கு பாலிடெக்னிக் மாணவர் தேசிய செஸ் போட்டியில் சாதனை
/
கொங்கு பாலிடெக்னிக் மாணவர் தேசிய செஸ் போட்டியில் சாதனை
கொங்கு பாலிடெக்னிக் மாணவர் தேசிய செஸ் போட்டியில் சாதனை
கொங்கு பாலிடெக்னிக் மாணவர் தேசிய செஸ் போட்டியில் சாதனை
ADDED : டிச 13, 2025 06:22 AM

பெருந்துறை: பெங்களூரு ராஜேஸ்வரி மருத்துவ கல்லுாரி வளாகத்தில், ஏ.ஐ.சி.ஐ., அமைப்பு சார்பில், தேசிய அளவில் சதுரங்க போட்டி நடந்தது. இதில், 492 வீரர்கள் கலந்து கொண்டனர்.
பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி முதலாமாண்டு இ.சி.இ., பிரிவு மாணவர் சவுதீஸ்குமார், ஒன்பது போட்டிகளில் ஏழு புள்ளி பெற்று முதலிடம் பிடித்தார். மாணவருக்கு பரிசு கோப்பை, ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இம்மாணவர் இன்டர்நேஷனல் ரேட்டிங் அளவில், 150 வெற்றி புள்ளிகளை எடுத்துள்ளார். உதய்ப்பூரில், 2024ல் நடந்த தேசிய சதுரங்க போட்டியிலும் முதலிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.சாதனை படைத்த மாணவரை கல்லுாரி தாளாளர் கார்த்திகேயன், கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) செந்தில்குமார், கல்லுாரி உடற்-கல்வி இயக்குனர் பூபதி மணிகண்டன் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்தினர்.