/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோவை சாப்ட்வேர் நிறுவனத்துடன் கொங்கு கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

ADDED : பிப் 15, 2024 10:57 AM
பெருந்துறை: பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரியில் படிக்கும் இளம் மாணவ கண்டுபிடிப்பாளர்களுக்கு நிகழ் நேர பயிற்சி வழங்குவதற்காக, வளாகத்திற்குள் சுற்றுச்சூழலை உருவாக்க கல்லுாரி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக கோயம்புத்துாரில் உள்ள, டெக்னோடேக்கிள் சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இது மாணவர்களை நேரடி திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதிப்பதாகும். மேலும் மாணவர்களை கல்லுாரி சூழலில் இருந்து, தொழில்முறை பணிச்சூழலுக்கு எளிமையான வகையில் முன்னேற வழி வகுக்கும். கோயம்புத்துார் டெக்னோடேக்கிள் சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பாலவிஷ்ணு மற்றும் கல்லுாரி முதல்வர் முனைவர் பாலுசாமிஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இ டெக்னோடேக்கிள் சாப்ட்வேர் சொல்யூஷன் பங்குதாரர்களான மதுமிதா மற்றும் பழனியப்பன் கல்லுாரி ஐஐபிசியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சத்தியமூர்த்தி, ஐடி துறைத் தலைவர் முனைவர் ஆனந்தமுருகன் மற்றும் பேராசிரியர் முனைவர் தங்கராஜன் உள்ளிட்ட துறை பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.