/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடுமுடி வாலிபர் கார் மோதியதில் பலி
/
கொடுமுடி வாலிபர் கார் மோதியதில் பலி
ADDED : ஆக 20, 2025 01:17 AM
ஈரோடு, கொடுமுடி, சென்ன சமுத்திரம், சாலைப்புதுார் வடக்கு வீதியை சேர்ந்தவர் நந்தகுமார், 27; திருப்பூர் டெக்ஸ்டைல் ஊழியர். கடந்த, 17ம் தேதி இரவு, ௧௧:30 மணிக்கு வேலை முடிந்து, பல்சர் பைக்கில் வீடு திரும்பினார்.
தாமரைப்பாளையம் சலவையர் காலனி அருகே சென்ற போது, கரூரில் இருந்து ஈரோடு நோக்கி வந்த கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த நந்தகுமார், கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
கார் டிரைவரான ஈரோடு, வளையக்கார வீதி கார்த்திக்ராஜா மீது, கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காரில் கார்த்திக் ராஜாவுடன் அவரது தாய் மஞ்சுளா, 54, வந்தார். விபத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டது. ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

