/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெயரில் இருந்தால் போதுமா; செயலில் காட்ட வேண்டாமா? 'ஸ்மார்ட்' சிட்டியில் தேங்கும் குப்பையால் சீர்கேடு
/
பெயரில் இருந்தால் போதுமா; செயலில் காட்ட வேண்டாமா? 'ஸ்மார்ட்' சிட்டியில் தேங்கும் குப்பையால் சீர்கேடு
பெயரில் இருந்தால் போதுமா; செயலில் காட்ட வேண்டாமா? 'ஸ்மார்ட்' சிட்டியில் தேங்கும் குப்பையால் சீர்கேடு
பெயரில் இருந்தால் போதுமா; செயலில் காட்ட வேண்டாமா? 'ஸ்மார்ட்' சிட்டியில் தேங்கும் குப்பையால் சீர்கேடு
ADDED : ஜன 02, 2024 10:53 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், வீதிகளில் குப்பை தேங்கி கிடப்பது, சுகாதார சீர்கேட்டுக்கு காரணமாவதுடன், மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி என்று பெயரெடுத்த நிலையில், பெயரில் இருக்கும் 'ஸ்மார்ட்', சுகாதாரத்தில், செயலில் இல்லை. மாநகரில் பல வீதிகளில் குப்பை தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மாநகராட்சி நுண் உர செயலாக்க மையத்தில் குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மாநகர் முழுவதும் குப்பை முறையாக சேகரிக்கப்படுவதில்லை. மாநகரில் பிரதான சாலையோரங்களில் தொட்டி வைக்கப்பட்டு ஓரளவுக்கு குப்பை அகற்றப்பட்டு வருகிறது. ஆனால், பெரும்பாலான வீதிகளில் குப்பையை சீரான இடைவெளியில் அள்ளுவதில்லை. தொட்டியும் தேவையான அளவுக்கு வீதிகளில் வைக்கப்படுவதில்லை.
இதனால் சில இடங்களில் குப்பை கொட்ட இடமின்றி, வீதிகளில் மக்கள் குப்பை கொட்டி வருகின்றனர். சில இடங்களில் ஓட்டை, உடைசல் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தொட்டியில் போடப்படும் குப்பை ரோட்டில் சிதறி கிடக்கின்றன. குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைக்கப்படுவதால் கிளம்பும் நச்சுப்புகையால், அனைத்து தரப்பினரும் பாதிக்கின்றனர். ஸ்டோனி பிரிட்ஜ் மற்றும் கருங்கல்பாளையம் ரோட்டில் மீன் மற்றும் இறைச்சி கழிவு கொட்டப்படுவதால், இப்பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
ஓட்டல்கள், பெரிய நிறுவனங்களில் சேரும் குப்பையை அப்புறப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்துகிறது. ஆனால், மக்களிடம் குப்பையை சேகரிப்பதில், மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி என்பதை நினைவில் கொண்டு, குப்பை அள்ளுவதில் பாகுபாடு காட்டாமல், மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் தொட்டி வைப்பதோடு, தினமும் குப்பையை அப்புறப்படுத்த வேண்டும் என்று, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

