ADDED : டிச 27, 2025 07:57 AM

ஈரோடு: ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதியில், பூண்டு மண்டி
கள் உள்ளன. தற்போது பூண்டு வரத்து குறைந்துள்ள நிலையில், விலையும் எகிறியுள்ளது. கடந்த வாரம் கிலோ, 180 ரூபாய்க்கு விற்ற பூண்டு, 300 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து பூண்டு வியாபாரிகள் கூறியதாவது: மத்திய பிரதே-சத்தில் இருந்து நாட்டு பூண்டு, மலைப்பூண்டு வரத்தாவது வழக்கம். தமிழகத்திலும் ஒரு சில பகுதிகளில் இருந்து பூண்டு வருகிறது.
ஆண்டுக்கு நான்கு மாதம் மட்டுமே பூண்டு விளையும். அதன் பின் இரண்டு மாதம் அறுவடை காலமாகும். அறுவடை சம-யத்தில் விலை குறையும்.
மற்ற மாதங்களில் படிப்படியாக வரத்து குறைந்து விலை அதிக-ரிக்கும். இதனால் தான் கடந்த கடந்த வாரத்தில், 180 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ பூண்டு, 300 ரூபாயை தொட்டுள்ளது. தை மாதம் முதல் புதுப்பூண்டு வரத்தாகும். அப்போது புது பூண்டின் விலை குறையும்.
இவ்வாறு கூறினர்.

