/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்டத்தில் நீட்- - ஜே.இ.இ., தேர்வுக்கு அரசு பள்ளிகளில் இலவச பயிற்சி வகுப்பு
/
மாவட்டத்தில் நீட்- - ஜே.இ.இ., தேர்வுக்கு அரசு பள்ளிகளில் இலவச பயிற்சி வகுப்பு
மாவட்டத்தில் நீட்- - ஜே.இ.இ., தேர்வுக்கு அரசு பள்ளிகளில் இலவச பயிற்சி வகுப்பு
மாவட்டத்தில் நீட்- - ஜே.இ.இ., தேர்வுக்கு அரசு பள்ளிகளில் இலவச பயிற்சி வகுப்பு
ADDED : மார் 28, 2024 07:08 AM
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், நான்கு அரசு பள்ளிகளில் நீட்-ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது.நீட் தேர்வு மே மாதத்திலும், ஜே.இ.இ., தேர்வு ஏப்ரலிலும் நடக்கிறது.
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, பவானி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோபி நகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் உள்ள ஹை-டெக் லேப்களில் நீட், ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு விண்ணப்பித்த அரசு பள்ளி மாணவ, -மாணவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது. மே 2 வரை பயிற்சி வகுப்பு நடக்கிறது. ஈரோடு, அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இலவச பயிற்சி மையத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சம்பத் துவக்கி வைத்தார். 48 மாணவ, -மாணவிகள் பங்கேற்றனர். தலைமையாசிரியை சுகந்தி மற்றும் பயிற்சியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பள்ளிக்கல்வித்துறையினர் கூறியதாவது:ஜே.இ.இ., தேர்வுக்கு தனியாகவும், நீட் தேர்வுக்கு தனியாகவும் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. தினமும் காலை, 9:00 மணிக்கு துவங்கி மாலை, 4:00 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடக்கும். பயிற்சி வகுப்பில் நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பித்த அரசு பள்ளி மாணவ--மாணவிகள் பங்கேற்கலாம். திங்கள் முதல் வெள்ளி வரை வகுப்புகள் நடக்கும். சனிக்கிழமை தேர்வு நடைபெறும். ஞாயிறு விடுமுறை.இவ்வாறு கூறினர்.

