/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.11 லட்சம் மோசடி
/
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.11 லட்சம் மோசடி
ADDED : மே 15, 2024 02:08 AM
கிருஷ்ணகிரி:ஓசூர், தனியார் நிறுவன ஊழியரிடம் முதலீட்டிற்கு அதிக லாபம் தருவதாக கூறி, 11 லட்சம் மோசடி நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி
மாவட்டம், ஓசூர் ஆவலப்பள்ளியை சேர்ந்தவர் சங்கர், 45, தனியார் நிறுவன
ஊழியர்; இவரது மொபைல் போனுக்கு கடந்த, ஜன., 17 ல் 'பார்ட் டைம்
கம்பிளீட் ஜாப்' என்ற தலைப்பில் பகுதிநேர வேலை என்ற தகவல் வந்தது.
அதில், அவர்களின் மெசேஜை கிளிக் செய்து, லைக் கொடுத்த சங்கருக்கு,
சிறிது பணம் கிடைத்தது.
தொடர்ந்து, நாங்கள் அனுப்பும் 'லிங்க்'கை
கிளிக் செய்து, குறிப்பிட்டுள்ள கணக்கிற்கு பணம் அனுப்பினால், உங்கள்
முதலீட்டு தொகையுடன் லாபமும் கிடைக்கும் என, மெசேஜ் வந்தது. அதை நம்பிய
சங்கர் தன்னிடமிருந்த, 11 லட்சம் ரூபாயை அனுப்பினார். அதன் பின்,
எந்த தகவலும், பணமும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சங்கர்,
கிருஷ்ணகிரி சைபர் கிரைமில் அளித்த புகார் படி, போலீசார்
விசாரிக்கின்றனர்.

