தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தேங்காய் மட்டை மில்லில் தீ

தேங்காய் மட்டை மில்லில் தீ

தேங்காய் மட்டை மில்லில் தீ


ADDED : ஏப் 06, 2024 02:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2024 02:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்:தாளவாடி மலையில் அண்ணாநகரில் இளங்கோ என்பவருக்கு சொந்தமான தேங்காய் மட்டை மில் உள்ளது. நேற்று மதியம் மில்லில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் மளமளவென பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து ஆசனுார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தாளவாடியில் இருந்து, 30 கி.மீ., துாரத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் வருவதற்குள், மில் முழுவதும் எரிந்து சேதமானது. சேத மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கலாம் எனத் தெரிகிறது. இதுபோன்ற சம்பவங்களில் அதிக சேதாரங்களை தவிர்க்க, தாளவாடியில் உடனடியாக தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us