/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'ஆக்கிரமிப்புகளை அகற்ற தனி தாசில்தார் நியமனம்' குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

ADDED : அக் 04, 2024 01:03 AM
'ஆக்கிரமிப்புகளை அகற்ற தனி தாசில்தார் நியமனம்'
குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
ஈரோடு, அக். 4-
ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம் ஆர்.டி.ஓ., சதீஸ்குமார் தலைமையில் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் அமுதா முன்னிலை வகித்தார்.
* கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சபை கவுரவ தலைவர் ராமசாமி பேசியதாவது: கீழ்பவானி வாய்க்காலில் பிரதான, கிளை, கொப்பு வாய்க்காலிலும் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. அவற்றை அகற்ற தனியாக குழு அமைத்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் நிலைக்கு சொந்தமான இடங்களை அளவீடு செய்து, உடனடியாக கல் நட்டால், ஆக்கிரமிப்பு தவிர்க்கப்படும். வருவாய் துறையில் தவறாக, பல நிலங்களை நத்தம் புறம்போக்கு, ரயத்து நிறுத்தம் என பதிவு செய்து வைப்பதால், அந்நில உரிமையாளர்கள் விற்பனை செய்ய முடியாமல் தவிக்கின்றனர். அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் சுப்பு: கொப்பு வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற, நீர் வளத்துறையில் மனு கொடுத்தால், நீர் வளத்துறை, தாசில்தார், சர்வேயர் என ஒவ்வொருவருக்கும் கடிதம் அனுப்பி, நடவடிக்கை எடுக்க பல மாதமாகிறது.
ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கென தனி தாசில்தாரை நியமிக்க வேண்டும். இவ்வாறு பேசினர். கூட்டத்தில், 50க்கும் மேற்பட்டோர் மனு வழங்கினர்.