/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மட்டி தயாரிக்கும் ஆலையை மூடக்கோரி விவசாயிகள் கோரிக்கை
/
மட்டி தயாரிக்கும் ஆலையை மூடக்கோரி விவசாயிகள் கோரிக்கை
மட்டி தயாரிக்கும் ஆலையை மூடக்கோரி விவசாயிகள் கோரிக்கை
மட்டி தயாரிக்கும் ஆலையை மூடக்கோரி விவசாயிகள் கோரிக்கை
ADDED : செப் 30, 2024 06:51 AM
டி.என்.பாளையம்: கோபி தாலுகா, டி.என்.பாளையம் யூனியனுக்கு உட்பட்ட அரக்கன் கோட்டை, புள்ளப்பநாயக்கன் பாளையம், சென்றாயம்பாளையம், செல்லிபாளையம் கிராமங்களை சேர்ந்தவர்கள், அரக்கன் கோட்டை கிராமத்தில் செயல்பட்டு வரும் மட்டி ஆலையை மூட கோரி, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: அரக்கன் கோட்டை, புள்ளப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த நாங்கள், விவசாயம், ஆடு மாடு மேய்த்தல், விவசாய கூலி வேலை செய்து வருகிறோம். எங்கள் பகுதியில் மட்டி ஆலை உள்ளது. சர்க்கரை ஆலை கழிவுகளை கொண்டு, மட்டி தயாரிக்கின்றனர். இந்த ஆலையால் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மிகவும் மாசு அடைந்துள்ளது. போர்வெல்களில் மட்டி படிவம் தேங்கி உள்ளது.
-தண்ணீரில் உள்ள மொத்த திடப்பொருட்களின் அளவு, 600 டி.டி.எஸ்.,க்குள் இருந்தால் குடிக்க பயன்படுத்த முடியும். ஆனால், 900 முதல், 2,150 வரை உள்ளதாக சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல என சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆலை, சத்தியமங்கலம் புலிகள் காப்பாக வனப்பகுதி ஒட்டி உள்ளதால் விவசாயம், விலங்குகள் பாதிக்கப்படும்.
ஆலையை புள்ளப்பநாயக்கன்பாளையம் கிராமத்தில், விரிவாக்கம் செய்ய வேலை செய்து வருகின்றனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதுகுறித்து மாவட்ட கலெக்டர், கோபி எம்.எல்.ஏ., சத்தியமங்கலம் புலிகள் காப்பக அலுவலர், முதல்வர் தனி பிரிவு உள்ளிட்ட, 13 பிரிவுகளுக்கு மனு அளித்துள்ளோம்.ஆ னால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த கட்டமாக சாலை மறியல், சாகும் வரை உண்ணாவிரதம் நடத்துவோம். இவ்வாறு கூறினர்.

