/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போலீஸ் துப்பாக்கி சுடுதலில் ஈரோட்டுக்கு இரு பதக்கம்
/
போலீஸ் துப்பாக்கி சுடுதலில் ஈரோட்டுக்கு இரு பதக்கம்
போலீஸ் துப்பாக்கி சுடுதலில் ஈரோட்டுக்கு இரு பதக்கம்
போலீஸ் துப்பாக்கி சுடுதலில் ஈரோட்டுக்கு இரு பதக்கம்
ADDED : ஜூலை 29, 2025 01:19 AM
ஈரோடு,
தமிழக போலீசில் ஆண்டுதோறும் துப்பாக்கி சுடும் போட்டி நடக்கிறது. நடப்பாண்டு போட்டி கடந்த, 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை காஞ்சிபுரம் மாவட்டம் ஒத்திவாக்கத்தில் நடந்தது. இதில் கார்பைன் துப்பாக்கி, 50 யார்டு பிரிவில், ஈரோடு இன்ஸ்பெக்டர் ரமேஷ் தங்கப்பதக்கம்
வென்றார். இதேபோல் ரைபிள் 300 யார்டு பிரிவில் ஈரோடு போலீஸ் சோனியா வெள்ளிப்பதக்கம் வென்றார். மேற்கு மண்டலம் சார்பில், 11 பதக்கம், நான்கு கேடயம், கோப்பை வென்றவர்களை, ஈரோடு எஸ்.பி., சுஜாதா பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேற்கு மண்டல போலீசார் அனைவரும், எழுமாத்துார் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.