/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று
/
ஈரோடு தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று
ஈரோடு தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று
ஈரோடு தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று
ADDED : மே 02, 2025 01:23 AM
ஈரோடு:
ஈரோடு தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு, மத்திய அரசின் ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில், டவுன் சப்-டிவிசனுக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் ஐ.எஸ்.ஓ., தர கவுன்சில் குழுவினர், சில மாதங்களுக்கு முன் ஆய்வு செய்தனர். மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களிலும் ஆய்வு செய்யப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன்களை சுகாதாரமாகவும், தூய்மையாகவும் பராமரிப்பது, புகார் அளிக்க வரும் பொதுமக்களை நடத்தும் விதம், அவர்களுக்கான இருக்கை வசதி, குடிநீர் வசதி, போலீசார் சீருடை அணியும் விதம்
போன்றவற்றை ஆய்வு செய்து மதிப்பீடு செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில், சிறந்த தரத்துடன் இருப்பதாக ஈரோடு தாலுகா போலீஸ் ஸ்டேஷன் தேர்வு செய்யப்பட்டது. ஈரோடு தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. ஐ.எஸ்.ஓ., தர கவுன்சிலின் இயக்குனர் கார்த்திகேயன், ஈரோடு எஸ்.பி., சுஜாதாவிடம் ஐ.எஸ்.ஓ 9001:2015 தரச்சான்றிதழ் மற்றும் பணியிட மதிப்பீட்டிற்கான பாதுகாப்பு மற்றும் சுகாதார சான்றிதழை வழங்கினார்.
டவுன் டி.எஸ்.பி முத்துக்குமரன், தாலுகா போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சரவணன் உடன் இருந்தனர்.

