/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அமைச்சரின் எச்சரிக்கையை மீறி சுண்ணாம்பு ஓடையில் பாயும் சாய கழிவுநீர்

ADDED : ஆக 28, 2024 07:26 AM
ஈரோடு: அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கையை மீறி, ஓடையில் சாய கழிவு நீரை திறந்து விடும் தொழிற்சாலைகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு சுண்ணாம்பு ஓடையை துார் வாரும் பணியை, அமைச்சர் முத்துசாமி கடந்த, 22ம் தேதி தொடங்கி வைத்தார். அதேசமயத்தில் ஓடையில் கழிவு நீர் பாய்ந்தோடியது. இதைப்பார்த்த அமைச்சர் ஓடைகளில், சாயக்கழிவு மற்றும் தோல் கழிவுகளை நேரடியாக திறந்து விட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். இந்நிலையில் பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில், தோல் மற்றும் சாயக்கழிவு நீர் நேற்று வழக்கம்போல் பாய்ந்தோடியது.
அமைச்சர் எச்சரிக்கையை கண்டு கொள்ளாமல், சாயக்கழிவு நீரை திறந்து விடும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது வழக்கம்போல் மாநகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் கடந்து சென்று விடுவார்களா என்று, மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.