ADDED : ஆக 05, 2025 01:17 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை, கேரளா மாநிலம் வயநாட்டை சேர்ந்தவர் ராஜாமணி, 35; லாரி டிரைவர். கேரளாவில் இருந்து இஞ்சி ஏற்றிக்கொண்டு ஒட்டன்சத்திரம் சென்ற லாரியில், கூடுதல் டிரைவராக ராஜாமணி சென்றார். லோடு இறக்கி விட்டு பெருந்துறை சிப்காட்டுக்கு மாட்டு தீவனம் லோடு ஏற்ற நேற்று முன்தினம் வந்தார்.
லாரி மீதேறி தார்ப்பாய் சரியாக மூடியுள்ளதா என்று பார்த்தபோது, தலை சுற்றல் ஏற்பட்டு ராஜாமணி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்தவரை பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
