ADDED : செப் 27, 2024 01:24 AM
அ நிறம் | அளவு
தி.மு.க., கொண்டாட்டம்
பவானி, செப். 27--
தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, சுப்ரீம் கோர்ட் ஜாமினில் நேற்று விடுவித்தது. இதை பவானி நகர தி.மு.க.,வினர் கொண்டாடினர். பவானி புது பஸ் ஸ்டாண்ட் அருகில், மாவட்ட பிரதிநிதி ராஜசேகர், நகர துணை செயலாளர் ரவி, நகர மாணவரணி அமைப்பாளர் விமல்குமார் உள்ளிட்டோர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
