/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் டெங்கு தடுப்பு ஆலோசனை கூட்டம்
/
ஈரோட்டில் டெங்கு தடுப்பு ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 07, 2025 01:08 AM
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி பகுதிகளில், டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் பேசுகையில்,''மழைக்காலம் நெருங்கி வருகிறது. டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் முறை குறித்து, மக்களிடன் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தெருக்கள், வீடுகளில் கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பது, வீடுகளில் உருளை, பிளாஸ்டிக் டப்பா, திறந்தவெளி டிரம்கள், டயர்கள் போன்ற தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி, துாய்மையாக வைத்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். இக்கூட்டத்தில், மாநகராட்சி சுகாதார அதிகாரிகள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

