ADDED : அக் 17, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்
அந்தியூர், அக். 17-
நாமக்கல் மாவட்டம் நரவலுாரில், மரம் வெட்டிய நபர்களை தடுத்த வி.ஏ.ஓ., தாக்கப்பட்டார். இதை கண்டித்தும், வி.ஏஓ.,வை தாக்கியவர்களை கைது செய்யக்கோரியும், அந்தியூர் தாலுகா அலுவலகம் முன், ஈரோடு மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர் வீரமுத்து, பொருளாளர் சந்தோஷ்குமார் உட்பட வி.ஏ.ஓ.,க்கள் கலந்து கொண்டனர்.

