/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'ஆதார்' புதுப்பித்தல் தாமதம் ஆசிரியர்கள் புது யோசனை
/
'ஆதார்' புதுப்பித்தல் தாமதம் ஆசிரியர்கள் புது யோசனை
'ஆதார்' புதுப்பித்தல் தாமதம் ஆசிரியர்கள் புது யோசனை
'ஆதார்' புதுப்பித்தல் தாமதம் ஆசிரியர்கள் புது யோசனை
ADDED : அக் 28, 2024 03:42 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆதார் கார்டை புதுப்பித்து கொள்ள பள்ளிகளிலேயே சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் குறைந்தபட்ச ஊழியர்களே ஈடுபடுவதால், ஆதார் கார்டை புதுப்பிக்க கால தாமதம் ஏற்பட்டுள்ளது.இதுபற்றி ஆசிரியர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் அரசு பள்ளிகளில், 61,319 மாணவ, மாணவிகள்; நிதியுதவி பள்ளிகளில் 12,089 பேர்; பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1,892 பேர்; தனியார் பள்ளிகளில் 1,48,765 என, 2,24,065 பேர் ஆதார் கார்டை புதுப்பிக்காமல் உள்ளனர். இந்த பணியில், 16 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர்.
தினமும், 110 பேருக்கு மட்டுமே அதாவது ஒரு மையத்தில் ஏழு அல்லது எட்டு பேருக்கு மட்டுமே புதுப்பிக்க இயலும் நிலை உள்ளது. இதனால் இப்பணியை, ௧00 சதவீதம் நிறைவேற்றுவது சாத்தியமா?என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேசமயம் இந்தப்பணியை, ஆசிரியர்களை விரைவுபடுத்த செய்வதால் எவ்வித பலனும் ஏற்படாது. தேவையான அளவு ஊழியர்களை நியமித்து ஆதார் கார்டு புதுப்பிக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்.

