/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாறுமாறாக பயணிக்கும் வாகனங்களால் ஆபத்து
/
தாறுமாறாக பயணிக்கும் வாகனங்களால் ஆபத்து
ADDED : அக் 03, 2024 01:34 AM
தாறுமாறாக பயணிக்கும்
வாகனங்களால் ஆபத்து
கோபி, அக். 3-
கோபி அரசு போக்குவரத்து கழக கிளை
பணிமனை அருகே, தாறுமாறாக பயணிக்கும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோபி, ஈரோடு சாலையில் அரசு போக்கு
வரத்து கழகத்தின், கிளை பணிமனை உள்ளது. அப்பகுதியில் பிரதான சத்தி சாலையின் மையத்தில், சென்டர் மீடியன்கள் கற்கள் இடைவெளி விடப்பட்டுள்ளது. இதனால், நாயக்கன்காடு, அத்தாணி சாலை செல்லும் வாகனங்கள், பணிமனை அருகே தாறுமாறாக திரும்புகிறது. அதேசமயம் பணிமனைக்குள், அரசு பஸ்களும் செல்ல வேண்டியுள்ளது. இதனால் இடநெருக்கடியான பகுதியில், தாறுமாறாக வாகனங்கள் பயணிப்பதால், அப்பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பிரதான சத்தி மற்றும் ஈரோடு சாலையில், ரப்பர் ஸ்பீடு பிரேக்கர் வசதி செய்ய வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

