/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கவுண்டிங் மைய நடைமுறை வேட்பாளர், முகவர்களுக்கான நிபந்தனை வெளியீடு
/
கவுண்டிங் மைய நடைமுறை வேட்பாளர், முகவர்களுக்கான நிபந்தனை வெளியீடு
கவுண்டிங் மைய நடைமுறை வேட்பாளர், முகவர்களுக்கான நிபந்தனை வெளியீடு
கவுண்டிங் மைய நடைமுறை வேட்பாளர், முகவர்களுக்கான நிபந்தனை வெளியீடு
ADDED : மே 21, 2024 11:32 AM
ஈரோடு: ஓட்டு எண்ணும் மையத்தில் வேட்பாளர், முகவர் கடைபிடிக்க வேண்டிய நடைமுறை குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இதில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது: ஈரோடு லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியில் வரும், 4ம் தேதி காலை, 8:00 மணிக்கு துவங்குகிறது. ஓட்டு எண்ணும் மையத்தில் ஆஜராகும் முகவர்கள், படிவம்-18ஐ பூர்த்தி செய்து அடையாள அட்டை பெற வேண்டும்.
புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை. முகவர்களின் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. வேட்பாளர்கள் வாகனத்தை பயன்படுத்த, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். மையத்துக்குள் காலை, 7:30 மணிக்கு பின் வருவோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஓட்டுச்சாவடி வாரியாக வேட்பாளர் பெற்ற ஓட்டு விபரத்தை 'டிஸ்பிளே' செய்வதை, கவுண்டிங் சூப்பர்வைசர், மைக்ரோ அப்சர்வர் பார்வையிட்டு குறிப்பிடுவார். அதை பார்வையிடலாம்.
ஓட்டு எண்ணும் இடத்தில் வீண் விவாதம், கூச்சல், தகராறு செய்தால், போலீஸ் மூலம் வெளியேற்றப்படுவர். ஐயம் எழுந்தால், ஏ.ஆர்.ஓ.,விடம் தெரிவித்து தீர்வு பெறலாம். செல்போன் எடுத்து செல்லுதல், புகை பிடித்தல், மது குடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட ஐந்து ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஓட்டுகள் வி.வி.பேட் இயந்திரத்தில் வேட்பாளர் வாரியாக பிரித்து எண்ணப்படும். இதை முகவர்கள் பார்வையிடலாம். வெளியில் இருந்து உணவு பொருள் எடுத்து வர அனுமதி இல்லை. இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் எஸ்.பி., ஜவகர், மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி, டி.ஆர்.ஓ., சாந்தகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரகுநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

