/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்., சிறுபான்மை பிரிவுக்கான நிர்வாகிகள் நியமன கலந்தாய்வு
/
காங்., சிறுபான்மை பிரிவுக்கான நிர்வாகிகள் நியமன கலந்தாய்வு
காங்., சிறுபான்மை பிரிவுக்கான நிர்வாகிகள் நியமன கலந்தாய்வு
காங்., சிறுபான்மை பிரிவுக்கான நிர்வாகிகள் நியமன கலந்தாய்வு
ADDED : செப் 13, 2024 06:40 AM
ஈரோடு: ஈரோடு மாநகர், ஈரோடு தெற்கு, ஈரோடு வடக்கு மாவட்ட காங்., சிறுபான்மை பிரிவுக்கு, புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து கலந்தாய்வு, நேர்காணல் ஈரோட்டில் நேற்று நடந்தது.
முன்னாள் மாநில துணைத் தலைவர் ஜவஹர் அலி தலைமை வகித்தார். மாவட்ட காங்., பொறுப்பாளர் திருச்செல்வம், முன்னாள் மாவட்ட தலைவர் பழனிச்சாமி, முன்னாள் மாவட்ட தலைவர் ரவி, தெற்கு மாவட்ட காங்., தலைவர் மக்கள் ராஜன் முன்னிலை வகித்தனர். காங்., சிறுபான்மை மாநில தலைவர் முகமது ஆரிப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிருபர்களிடம் முகமது ஆரி் கூறியதாவது:
காங்., கட்சி மதுவிலக்கை ஆதரிக்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டு விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பதில் அரசியல் இல்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி, தங்களின் மாநாட்டுக்கு அனைத்து கட்சிக்கும் அழைப்பு விடுத்து வருகிறது. இஸ்லாமிய பள்ளிகளுக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.