/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிட்கோவில் வேளாண் உற்பத்தி சார்ந்த தொழில் மேம்பாட்டுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்

ADDED : செப் 18, 2025 01:59 AM
ஈரோடு ஊபெருந்துறை சிட்கோ தொழிற்பேட்டையில், ரூ.15.23 கோடி மதிப்பீட்டில் வேளாண் உற்பத்தி சார்ந்த தொழிலை மேம்படுத்தும் திட்டத்திற்கு, தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
ஈரோடு மாவட்ட சிறு தொழில் சங்கமான, 'ஈடிசியா' தொழில் துறைக்காக இயங்கி வருகிறது. இச்சங்கம் சார்பில் பெருந்துறை சிட்கோ தொழிற்பேட்டையில், வேளாண் உற்பத்தி சார்ந்த தொழில் முனைவோர்களுக்காக, உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என தொடர்ந்து அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இதையேற்ற தமிழக அரசு, ரூ.15.23 கோடி நிதி ஒதுக்கியது. இந்நிலையில், பெருந்துறை சிட்கோ தொழிற்பேட்டையில் வேளாண் உற்பத்தி சார்ந்த தொழில் முனைவோர்களுக்காக, புதிய உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டத்திற்கான பணிகளை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்த திட்டம் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும், மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்பதால், முதல்வருக்கு ஈடிசியா நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
ஈடிசியா தலைவர் கந்தசாமி, முன்னாள் தலைவர் திருமூர்த்தி, துணைத் தலைவர் சுரேஷ், இணை செயலாளர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, சிட்கோ கிளை மேலாளர் ஷர்மிளா, சிப்காட் திட்ட அலுவலர் சுஜா பிரியதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்.