/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மதுக்கடையை மாத்துங்க! ஆர்.டி.ஓ., ஆபீஸ் முற்றுகை
/
மதுக்கடையை மாத்துங்க! ஆர்.டி.ஓ., ஆபீஸ் முற்றுகை
ADDED : நவ 05, 2024 01:45 AM
மதுக்கடையை மாத்துங்க!
ஆர்.டி.ஓ., ஆபீஸ் முற்றுகை
தாராபுரம், நவ. ௫-
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, தாராபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை, மக்கள் நேற்று முற்றுகையிட்டனர். பிறகு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: தாராபுரம், பூக்கடை கார்னர் பகுதியில், டாஸ்மாக் கடை (எண்-3438) செயல்படுகிறது. வர்த்தக கடைகள் அதிகம் உள்ள பகுதியில் அமைந்துள்ள கடையால், வியாபாரிகள் பெரிய அளவில் பாதிக்கின்றனர். அந்த வழியாக பள்ளி செல்லும் மாணவியர் ஒருவித அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது. பல சமயங்கள் குடிமகன்கள் அரைகுறை ஆடையுடன், சாலையில் விழுந்து கிடக்கின்றனர். தகாத வார்த்தை பேசி தகராறில் ஈடுபடுவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மக்கள், வியாபாரிகள் நலன் கருதி, கடையை இடம் மாற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

